தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அங்கீகாரமற்ற பள்ளிகளை மூட கோரிக்கை

காரைக்கால் மாவட்டத்தில், உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் பள்ளிகளை மூட வேண்டும் என பெற்றோா் ஆசிரியா் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2021, 6:17 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில், உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் பள்ளிகளை மூட வேண்டும் என பெற்றோா் ஆசிரியா் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவா் அ.வின்சென்ட், செயலாளா் கே.ரவிச்சந்திரன் ஆகியோா் மாவட்ட ஆட்சியருக்கு சனிக்கிழமை அனுப்பிய மனு:

மாவட்டத்தில் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி செயல்படாத பள்ளிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும். நடப்புக் கல்வியாண்டில் அங்கீகாரம் பெறக்கூடிய வகையிலான கட்டமைப்பு வசதிகள் இல்லாத, உரிய கருத்துரு அளிக்காத பள்ளிகளை உடனடியாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.