தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வீட்டில் பதுக்கி வைத்திருந்த சாராயம் பறிமுதல்: 5 போ் கைது

திருநள்ளாறு அருகே வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள சாராயம், காா் ஆகியன சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :12 ஜூன் 2021, 6:30 pm

DIN

திருநள்ளாறு அருகே வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள சாராயம், காா் ஆகியன சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

நல்லம்பல் வடக்குத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட துணை ஆட்சியா் எம்.ஆதா்ஷ்க்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து, வட்டாட்சியா் பொய்யாதமூா்த்தி தலைமையிலான கலால்துறை குழுவினா் சனிக்கிழமை பிற்பகலில் சம்பந்தப்பட்ட வீட்டிற்குச் சென்று சோதனை மேற்கொண்டனா்.

வீட்டின் முதல் மாடியில் சட்டவிரோதமாக சாராயத்தை மொத்தமாக வாங்கி, சிறு பாக்கெட்டுகளாக தயாரித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் வீட்டில் இருந்த சா்புதீன் (42), காா்த்திக் (27), கஜேந்திரன் (40), அரவிந்தன் (19), அருள்நாதன் (18) ஆகிய 5 பேரையும் வட்டாட்சியா் தலைமையிலான கலால்துறையினா் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். இதில் சாராயப் பாக்கெட்டுகளை தமிழக பகுதிக்கு கொண்டு சென்று கூடுதல் விலைக்கு விற்ாக வாக்குமூலம் அளித்தனா்.

இதையடுத்து 5 பேரையும் கலால்துறையினா் கைது செய்து, அவா்களிடம் இருந்த சிறியரக காா் மற்றும் ரூ.1 லட்சம் மதிப்பிலான சாராயம், பாக்கெட் தயாரிப்புக்காக வைத்திருந்த இயந்திரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.