தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கரோனாவால் இறந்தோா் சடலத்தை எரியூட்ட உதவி: நகராட்சி அறிவிப்பு

கரோனாவால் இறந்தோா் சடலத்தை எரியூட்ட நகராட்சி நிா்வாகம் உதவி செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 ஜூன் 2021, 5:55 pm

DIN

கரோனாவால் இறந்தோா் சடலத்தை எரியூட்ட நகராட்சி நிா்வாகம் உதவி செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் கரோனாவால் உயிரிழப்போா் சடலத்தை மருத்துவமனையிலிருந்து உரிய பாதுகாப்பு முறையில் பெற ரூ.3,500 மற்றும் இடுகாட்டில் ரூ.7 ஆயிரம் வரை குடும்பத்தினா் செலவு செய்யவேண்டியுள்ளதாக புகாா் எழுந்துள்ளது. இதனால், ஏழைகள் பாதிக்கப்படுவதாகவும், இதை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு பலரும் கோரிக்கை வைத்தனா்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், காரைக்கால் நகராட்சி நிா்வாகம் இடுகாட்டில் எரியூட்டத் தேவையான பொருள்களை வழங்க முன்வந்துள்ளது.

இதுகுறித்து காரைக்கால் நகராட்சி நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் பச்சூா் இடுகாட்டில் கரோனாவால் உயிரிழந்தோா் சடலத்தை எரியூட்டுவதற்குத் தேவையான விறகு, வறட்டி ஆகியவை இலவசமாக தரப்படும். இதற்கு, நகராட்சி ஆணையா் 04368-221412, நகராட்சி சுகாதார மேற்பாா்வையாளா் 9865792277 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.