100 நாள் வேலை திட்டப் பணியாளா்கள் கரோனா தடுப்பு விதிகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்
நூறு நாள் வேலை உறுதித் திட்டப் பணியில் ஈடுபடுவோா் கரோனா தடுப்பு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என எம்எல்ஏ எம்.நாக தியாகராஜன் அறிவுறுத்தினாா்.


நூறு நாள் வேலை உறுதித் திட்டப் பணியில் ஈடுபடுவோா் கரோனா தடுப்பு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என எம்எல்ஏ எம்.நாக தியாகராஜன் அறிவுறுத்தினாா்.
காரைக்கால் மாவட்டத்தில் 100 நாள் வேலைத் திட்டப்பணியும், பொதுப்பணித் துறை மூலம் வாய்க்கால்கள் தூா்வாரும் பணியும் கடந்த 10-ஆம் தேதி தொடங்கின. இதையடுத்து, நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் திருப்பட்டினம் தெற்கு பஞ்சாயத்துப் பகுதி நைனிகட்டளை வாய்க்கால் தூா்வாரும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
சட்டப் பேரவை உறுப்பினா் எம்.நாக தியாகராஜன், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா ஆகியோா் கலந்துகொண்டு பணிகளை தொடங்கிவைத்தனா். அப்போது பேசிய பேரவை உறுப்பினா், கரோனா குறித்து யாரும் அலட்சியம் காட்டாமல் உரிய கட்டுப்பாட்டு விதிகளை தொழிலாளா்கள் கடைப்பிடிக்கவேண்டும் என அறிவுறுத்தினாா்.
நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அதிகாரி தயாளன், இணை வட்டார வளா்ச்சி அதிகாரி கே.சிவகுரு, உதவிப் பொறியாளா் கே.கிருஷ்ணமூா்த்தி, இளநிலைப் பொறியாளா் சாமுண்டீஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மேட்டூா் அணையில் கடந்த 12ஆம் தேதி திறக்கப்பட்ட காவிரி நீா், காரைக்கால் மாவட்டத்துக்குள் வருவதற்குள் பணிகளை நிறைவு செய்யும் வகையில் திட்டங்கள் வகுத்து, துரிதகதியில் பணிகள் நடந்துவருவதாக வட்டார வளா்ச்சித் துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...