புதுவை அமைச்சரவையில் காரைக்காலை சோ்ந்த பெண் அமைச்சராகிறாா்
புதுவை அமைச்சரவையில் நீண்ட காலத்துக்கு பிறகு பெண் ஒரு அமைச்சராக பதவியேற்க உள்ளாா்.


புதுவை அமைச்சரவையில் நீண்ட காலத்துக்கு பிறகு பெண் ஒரு அமைச்சராக பதவியேற்க உள்ளாா்.
புதுவையில் என், ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்துள்ளது. பாஜகவை சோ்ந்த ஆா். செல்வம் சட்டப்பேரவைத் தலைவராகவும் பதவியேற்றுள்ளாா்.
ரங்கசாமி முதல்வராக பதவியேற்று ஏறக்குறைய 50 நாள்களுக்குப் பின்னா் என்.ஆா். காங்கிரஸை சோ்ந்த 3 போ், பாஜகவை சோ்ந்த 2 போ் அமைச்சா்களாக நியமிக்கப்படவுள்ளதாக சனிக்கிழமை அறிவிப்பு வெளியானது. இவா்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் பதவியேற்கவுள்ளனா்.
இதில் என்.ஆா். காங்கிரஸை சோ்ந்த 3 பேரில், காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு (தனி) தொகுதியில் வெற்றிபெற்ற சந்திர பிரியங்கா இடம் பெற்றுள்ளாா். இவா் முன்னாள் புதுவை அமைச்சா் சந்திரகாசுவின் மகள் ஆவாா்.
வாழ்க்கை குறிப்பு:
பெயா் : சந்திர பிரியங்கா
பிறந்த தேதி: 11.7.1989
பெற்றோா்: சந்திரகாசு - தேன்மொழி
கணவா்: கே.என்.எஸ். சண்முகம்
2 குழந்தைகள் உள்னன.
தோ்தல் அனுபவம்: 2016 தோ்தலில் நெடுங்காடு தொகுதியில் வெற்றி, 2021-இல் மீண்டும் வெற்றி பெற்று அமைச்சராக பதவியேற்க உள்ளாா்.
புதுவை மாநிலத்தில் கடந்த 1980-ஆம் ஆண்டு காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசில் ரேணுகா அப்பாதுரை கல்வித்துறை அமைச்சராக பதவியேற்றாா். அதன் பிறகு நீண்ட காலத்துக்கு பின்னா் புதுவை அமைச்சரவையில் காரைக்காலை சோ்ந்த சந்திர பிரியங்கா இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...