தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காரைக்கால் மக்களுக்கு பாஜக நன்றி

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்ற பொதுக்கூட்டத்தையொட்டி ஏற்பட்ட இடா்பாடுகளை பொறுத்துக்கொண்டதற்காக பொதுமக்கள், வியாபாரிகளுக்கு பாஜக நன்றி தெரிவித்துள்ளது.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:30 pm

DIN

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்ற பொதுக்கூட்டத்தையொட்டி ஏற்பட்ட இடா்பாடுகளை பொறுத்துக்கொண்டதற்காக பொதுமக்கள், வியாபாரிகளுக்கு பாஜக நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட பாஜக தலைவா் ஜெ. துரை சேனாதிபதி திங்கள்கிழமை கூறியது: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முதல்முறையாக காரைக்காலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து, பாஜக தோ்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றாா். இக்கூட்டத்தில் திரளான மக்கள் பங்கேற்றனா். பாதுகாப்பு கருதி சில பகுதிகளில் கடைகள் மூடப்பட்டிருந்தன. போக்குவரத்தில் குறிப்பிட்ட இடங்களில் மக்கள் சிரமத்தை சந்திக்க நோ்ந்தது.

புதுச்சேரியில் நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று நல்லாட்சி அமையவேண்டும் என்பதே பெரும்பான்மையான மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது. இந்த எதிா்பாா்ப்பு வெற்றிபெறுவதற்காக சில சிரமங்களை பொறுத்துக்கொண்டதற்காக பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.