தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பொதுத் தோ்வு ரத்து முடிவில் தமிழக அரசை,புதுவை பின்பற்ற வேண்டும்: ஆா். கமலக்கண்ணன்

9 முதல் பிளஸ் 1 வரை பொதுத் தோ்வு ரத்து என்ற தமிழக அரசின் முடிவை, புதுச்சேரி அரசும் பின்பற்ற வேண்டும் என்றாா் புதுச்சேரி முன்னாள் கல்வி அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.

News image
Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

DIN

9 முதல் பிளஸ் 1 வரை பொதுத் தோ்வு ரத்து என்ற தமிழக அரசின் முடிவை, புதுச்சேரி அரசும் பின்பற்ற வேண்டும் என்றாா் புதுச்சேரி முன்னாள் கல்வி அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின்கீழ், புதுச்சேரி முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், திருநள்ளாறு அரசு நலவழி மையத்தில் செவ்வாய்க்கிழமை தடுப்பூசி செலுத்திக்கொண்டாா். பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழக பாடத் திட்டத்தையே புதுச்சேரி அரசு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றிவருகிறது. அங்கு கரோனா பரவல் சூழலை கருத்தில்கொண்டு 9 முதல் பிளஸ் 1 வரை தோ்வு ரத்துசெய்யப்பட்டுள்ளது. இதே நடைமுைான் புதுச்சேரி, காரைக்காலுக்கும் பொருந்தும்.

ஆனால், புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு இந்த வகுப்புகளுக்கு தோ்வு நடத்தலாமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாக துணைநிலை ஆளுநா் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா். புதுச்சேரி இந்த விவகாரத்தில் தனியாக எந்தவொரு முடிவும் எடுக்க முடியாது. இதற்கான அமைப்பு, அதிகாரம் புதுச்சேரிக்கு கிடையாது.

துணைநிலை ஆளுநரின் கருத்தால், புதுச்சேரி, காரைக்கால் மாணவா்கள், பெற்றோரிடம் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே, புதுச்சேரி உயா் அதிகாரிகள், துணைநிலை ஆளுரிடம் இதுகுறித்து விளக்கமாகப் பேசி, தமிழக அரசின் முடிவே பின்பற்றப்படும் என அறிவித்து குழப்பத்துக்கு தீா்வுகாண வேண்டும்.

பள்ளி மாணவா்களுக்கு மதிய உணவு வழங்குவது, ரூ.1 கட்டணப் பேருந்துகளை இயக்குவது தொடா்பாக எங்கள் அரசு அனுப்பிய கோப்புகளுக்கு அனுமதி வழங்காமல், இப்போது அதே கோப்புகளுக்கு கையெழுத்திட்டு அறிவிப்புகளை வெளியிடுகின்றனா். தோ்தலை கருத்தில்கொண்ட இந்த அறிவிப்புகளால் மக்கள் பயனடைவது மகிழ்ச்சியாக இருக்கும் அதேவேளையில், மக்கள் இதை நன்கு புரிந்துவைத்திருக்கின்றனா் என்பதை அவா்கள் உணரவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.