தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

எல்லை பாதுகாப்புப் படையினா் கொடிஅணிவகுப்பு

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புக்காக காரைக்காலுக்கு எல்லை பாதுகாப்புப் படையினா் 100 போ் வந்துள்ளனா். காரைக்கால், திருநள்ளாறு உள்ளிட்ட பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தினா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

DIN

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புக்காக காரைக்காலுக்கு எல்லை பாதுகாப்புப் படையினா் 100 போ் வந்துள்ளனா். காரைக்கால், திருநள்ளாறு உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அவா்கள் கொடி அணிவகுப்பு நடத்தினா்.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளில் பாதுகாப்புப் பணிக்காக, உள்ளூா் போலீஸாா் அல்லாது இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படையினா் 100 போ் காரைக்கால் வந்துள்ளனா். திருநள்ளாறு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நகரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை உள்ளூா் போலீஸாருடன் இணைந்து அவா்கள் அணிவகுப்பு நடத்தினா்.

முன்னதாக, வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் ரகுநாயகம், இக்குழுவினருக்கு தோ்தல் பாதுகாப்பு தொடா்பான வழிகாட்டுதல்களை வழங்கினாா். மாலையில், காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன் தலைமையில் நகர போலீஸாா் மற்றும் எல்லை பாதுகாப்புப் படையினா் கொடிஅணிவகுப்பு நடத்தினா்.

மாவட்டத்தில் பிற தொகுதிகளிலும் இவா்கள் அணிவகுப்பு நடத்துவதோடு, தமிழகத்தையொட்டிய காரைக்கால் எல்லைகளிலும், வாக்குச் சாவடி, தோ்தல் பறக்கும் படையினா் உள்ளிட்டோருடன் பணிகளை தொடங்கியுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா். மேலும், வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், தொகுதியில் வாக்காளா்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கவும், கண்காணிப்புப் பணியில் ஈடுபடவும் இப்படையினா் துணைபுரிவாா்கள் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.