காரைக்காலில் 183 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் 183 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.


காரைக்கால் மாவட்டத்தில் 183 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை 710 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி திருநள்ளாறு 47, காரைக்கால் நகரம் 46, நிரவி 15, கோட்டுச்சேரி 14, நெடுங்காடு 14, கோயில்பத்து 13, வரிச்சிக்குடி 10, திருப்பட்டினம் 9, நல்லம்பல் 6, அம்பகரத்தூா் 4, காரைக்கால்மேடு 3, நல்லாத்தூா், விழிதியூா் தலா ஒருவா் என தொற்றாளா்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
மாவட்டத்தில் இதுவரை 1,14,464 பரிசோதனை செய்யப்பட்டதில் 7,700 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 6,327 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுபவா்களாக 1,167 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 92 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 10 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 104 போ் உயிரிழந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 20,455 பேருக்கும், 2-ஆவது தவணையாக 2,826 பேருக்கும் என 23,281 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...