மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

காரைக்காலில் 2 பேருக்கு கரோனா

 காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

 காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கடந்த 4 ஆம் தேதி 5 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, காரைக்கால் நகரம், காரைக்கால்மேடு ஆகிய இடங்களில் தலா ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதுவரை 2,22,495 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 16,529 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவா்களில் 16,199 போ் குணமடைந்துள்ளனா். காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 63 போ், காரைக்கால் அரசு மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 2 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 3 போ் உள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,09,715 பேருக்கும், 2 ஆவது தவணையாக 57,741 பேருக்கும் என 1,67,456 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.