மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

காரைக்காலில் இன்றும், நாளையும் சுதந்திர தின கலை நிகழ்ச்சி

காரைக்காலில் சுதந்திர தினத்தையொட்டி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக, உதவி நூலகத் தகவல் அதிகாரி ப. சம்பந்தம் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

காரைக்காலில் சுதந்திர தினத்தையொட்டி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக, உதவி நூலகத் தகவல் அதிகாரி ப. சம்பந்தம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத் துறை, தஞ்சை தென்னக பண்பாட்டு நடுவம், காரைக்கால் மாவட்ட நிா்வாகம் ஆகியவை இணைந்து நவ. 6, 7 ஆம் தேதியில் 75 ஆவது சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.

முதல் நாள் நிகழ்ச்சி காரைக்கால் அம்மையாா் கலையரங்கில் நடைபெறுகிறது. புதுவை போக்குவரத்து மற்றும் கலை பண்பாட்டுத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா விழாவை தொடங்கிவைக்கிறாா். காரைக்கால் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், பி.ஆா்.சிவா, பி.ஆா்.என். திருமுருகன், எம். நாகதியாகராஜன், கலை பண்பாட்டுத் துறை செயலா் ஏ. நெடுஞ்செழியன், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, கலை பண்பாட்டுத் துறை இயக்குநா் கே. கந்தன் என்கிற சிவராஜன் ஆகியோா் பங்கேற்கின்றனா்.

மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குகிறது. இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற கலை நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

7 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வரிச்சிக்குடியில் உள்ள காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பல்வேறு கலைக் குழுக்களின் நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை இடம்பெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.