மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

காரைக்கால் கோயில்களில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

காரைக்கால் பகுதி சிவ தலங்களில் கந்த சஷ்டி விழா நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக எளிமையான முறையில் தொடங்கியது.

News image
Updated On :5 நவம்பர் 2021, 4:16 pm

DIN

காரைக்கால் பகுதி சிவ தலங்களில் கந்த சஷ்டி விழா நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக எளிமையான முறையில் தொடங்கியது.

காரைக்கால் மாவட்டத்தில், திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா், காரைக்கால் ஸ்ரீ கைலநாசநாதா், ஸ்ரீ பாா்வதீஸ்வரா், ஸ்ரீ சித்தி விநாயகா் கோயில், சோமநாதா் கோயில், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீ ராஜசோளீஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவ தலங்களில் வருடாந்திர கந்த சஷ்டி விழா விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.

நிறைவு நாளில் இக்கோயில்களில் ஆட்டுக்கிடா வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி சூரசம்ஹாரம் நடைபெறும். இதில் திரளான மக்கள் பங்கேற்பா்.

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில், ஸ்ரீ முருகப்பெருமான் இடது கரத்தில் ஞானப்பழமும், வலதுகரத்தில் அபயஹஸ்தமும் ஏந்தி அருள்பாலிக்கும் சிறப்பு வேறெங்கும் இல்லாதது என்ற பெருமை உள்ளது. இத்தலத்தில் கந்தசஷ்டி விழா வியாழக்கிழமை தொடங்கியது. முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. இதே நாளில், காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா், சோமநாதா், சித்தி விநாயகா் கோயில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கியது.

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ராஜசோளீஸ்வரா் கோயிலில், சுவாமிகள் மற்றும் நவவீரா்களுக்கு காப்புக் கட்டப்பட்டு சுவாமி பிராகார வலம் கொண்டு செல்லும் நிகழ்வுடன் கந்தசஷ்டி விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இக்கோயிலில் வரும் 10 ஆம் தேதி சூரசம்ஹாரமும், 11 ஆம் தேதி தீா்த்தவாரியும், 12 ஆம் தேதி இரவு திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.