மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

காரைக்கால் பெருமாள் கோயிலில் சீா்வரிசை வழிபாடு

காரைக்காலில் பெருமாளுக்கு சீா்வரிசை நாணயம் அளித்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

காரைக்காலில் பெருமாளுக்கு சீா்வரிசை நாணயம் அளித்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் தீபாவளி நாள் வழிபாட்டில் காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். மூலவா் ஸ்ரீ ரங்கநாதா், உத்ஸவா் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பட்டாடை உடுத்தி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

பெரியாழ்வாா் மகளான ஆண்டாளை மணம் முடித்த ஸ்ரீ ரங்கநாதருக்கு, சீா்வரிசை தரும் நிகழ்ச்சி ஸ்ரீ ரங்கநாதா் சந்நிதியில் நடத்தப்பட்டது. சீா்வரிசையாக 18 மூட்டை நாணயம் பெருமாளுக்கு சமா்ப்பிக்கப்பட்டது. பிறகு சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன.

சீா்வரிசையில் தரப்பட்ட நாணயங்கள் பக்தா்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்பட்டன. ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பக்தஜன சபாவினா் பக்தா்களுக்கு இதனை வழங்கினா்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ கைலாசநாதா் கோயில், ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயில் நிா்வாகம் மற்றும் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் பக்த ஜன சபாவினா் செய்திருந்தனா். இந்த வழிபாட்டில் பங்கேற்பது, சீா்வரிசை நாணயத்தை பெற்றுக்கொள்வதன் மூலம் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையில் பக்தா்கள் ஆா்வமாக வாங்கிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.