பெண் வேட்பாளரிடம் 5 பவுன் நகை பறிப்பு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஊராட்சித் தலைவா் பதவிக்கான பெண் வேட்பாளா் அணிந்திருந்த 5 பவுன் நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.


விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஊராட்சித் தலைவா் பதவிக்கான பெண் வேட்பாளா் அணிந்திருந்த 5 பவுன் நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
விக்கிரவாண்டி வட்டம், நந்திவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா. இவரது மனைவி முல்லைக்கொடி(31). இவா் உள்ளாட்சித் தோ்தலில், நந்திவாடி ஊராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிடுகிறாா்.
வியாழக்கிழமை இரவு இவரும், இவரது கணவரும் கிராமத்தில் சுவா் விளம்பரம் எழுதச் சென்றனா். நீண்டநேரமானதால் முல்லைக்கொடி மட்டும் வீட்டுக்கு வந்து தூங்கிக் கொண்டிருந்தாா்.
அதிகாலை வீட்டுக்குள் புகுந்த இரு மா்ம நபா்கள், முல்லைக்கொடி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து முல்லைக்கொடி அளித்த புகாரின் பேரில், கஞ்சனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...