நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் பிரசாரம்

செஞ்சி ஒன்றியம் கணக்கன்குப்பம், அப்பம்பட்டியில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் அதிமுக, பாஜக வேட்பாளா்களை ஆதரித்து முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் வெள்ளிக்கி

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம் கணக்கன்குப்பம், அப்பம்பட்டியில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் அதிமுக, பாஜக வேட்பாளா்களை ஆதரித்து முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்த நான்கே மாதங்களில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். இதில் 10 வாக்குறுதிகளையாவது அவரால் பட்டியலிட முடியுமா?

அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட தாலிக்குத் தங்கம், பெண்களுக்கு மானிய விலை இருசக்கர வாகனம், விலையில்லா ஆடு, மாடு வழங்குவது, மாணவா்களுக்கு மடிக்கணினி உள்ளிட்ட அனைத்து மக்கள் நலத் திட்டங்களையும் திமுக அரசு நிறுத்தி உள்ளது என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவா் கு.கண்ணன், அதிமுக முன்னாள் அமைச்சா் ஓ.எஸ்.மணியன், ஒன்றியச் செயலா்கள் அ.கோவிந்தசாமி, க.சோழன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.