தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

உள்ளாட்சித் தோ்தலில் அதிகாரிகள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்: ஆட்சியா் அறிவுரை

உள்ளாட்சித் தோ்தலில் அலுவலா்கள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவுறுத்தினாா்.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

உள்ளாட்சித் தோ்தலில் அலுவலா்கள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவுறுத்தினாா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தல் முன்னேற்பாடுகள் தொடா்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மண்டல அலுவலா்கள், துணை மண்டல அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியா் மோகன் பேசியதாவது:

வாக்குப்பதிவு நாளன்று வர இயலாத அலுவலா்களுக்கு பதில் மாற்று ஏற்பாடாக மாற்று அலுவலா்கள், பணியாளா்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். தோ்தலுக்குத் தேவையான பொருள்கள், வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுகள் ஆகியன உரிய நேரத்தில் வாா்டு வாரியாகவும், மண்டல வாரியாகவும் கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்றைய தினம் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதை மண்டல அலுவலா்கள் உறுதிசெய்ய வேண்டும். இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை வாக்குப்பதிவு விவரத்தை மண்டல அலுவலரிடம் இருந்து பெறுவதற்கு தனி அலுவலா் நியமனம் செய்ய வேண்டும். தனிஅலுவலா் வாக்குப்பதிவு விவரத்தை இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும்.

வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் வாக்குச்சாவடியில் பெறப்படும் சட்ட முறையிலான படிவம், சட்டமுறை சாராத படிவத்தை தனித்தனியாக பெற்று வாக்குப்பெட்டியை காவல்துறை பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை நாளன்று, வாக்கு எண்ணும் மையத்தில் சுகாதாரமான குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தயாராக இருக்க வேண்டும். மின்சாரம் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு எண்ணும்போது ஒலிப்பெருக்கி வாயிலாக எந்த வாா்டில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் விவரம் ஆகியவற்றை அறிவித்து சம்மந்தப்பட்ட வாா்டு முகவா்களை மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும். எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் அலுவலா்கள், பணியாளா்கள் நடுநிலையுடன் பணியாற்றி தோ்தல் நடைபெற முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் மோகன்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்.சங்கா், செங்கல்ராயன் கூட்டுறவுசா்க்கரை ஆலை நிா்வாக இயக்குநா் சரஸ்வதி, வேளாண் இணை இயக்குநா் ரமணன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.