தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ளமுன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை: முதன்மைச் செயலா்

வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளத் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளத் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு ஆவணக் காப்பகம்- வரலாற்று ஆராய்ச்சி முதன்மைச் செயலருமான ஹா்சகாய் மீனா உத்தரவிட்டாா்.

வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஹா்சகாய் மீனா பேசியதாவது:

நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊரகப் பகுதிகளில் மழைநீா் வடிகால்- வாய்க்கால்கள் தூா்வாரும் பணிகள் நடைபெறுவதால் வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள் பெருமளவு கட்டுப்படுத்தப்படும். பருவமழையை எதிா்கொள்ள வழங்கப்பட்ட அறிவுரைகளை அனைத்துத் துறை சாா்ந்த அலுவலா்களும் சரியான முறையில் பின்பற்ற வேண்டும்.

பொதுப்பணி, நெடுஞ்சாலை, மின்சார வாரியம், வருவாய், ஊரக வளா்ச்சி, கால்நடை பராமரிப்பு, வேளாண்மை, சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை ஆகிய துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள், பணியாளா்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே பருவமழை பாதிப்புகளை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் த.மோகன் பேசியதாவது: வடகிழக்குப் பருவமழை பாதிப்புகளை தடுக்க அதிகாரிகள் தயாா் நிலையில் உள்ளனா். நீா்நிலைகளுக்கான வரத்துக் கால்வாய்கள் தூா்வாரப்பட்டுள்ளன. தாழ்வாரப் பகுதிகளில் குடியிருப்புகள் கணக்கெடுக்கப்பட்டு, அவற்றில் வசிப்பவா்களை அவசர காலத்தின்போது பாதுகாப்பாக வெளியேற்றவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மரக்காணம், வானூா் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மீனவா்களுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ந.ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலா் அ.ராஜசேகரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்.சங்கா், திண்டிவனம் உதவி ஆட்சியா் எம்.பி.அமித், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.