தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை 1,000 இடங்களில் தடுப்பூசி முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் நான்காவது மெகா கரோனா தடுப்பூசி முகாம் வருகிற ஞாயிற்றுக்கிழமை (அக்.3) 1,000 இடங்களில் நடைபெறுகிறது

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் நான்காவது மெகா கரோனா தடுப்பூசி முகாம் வருகிற ஞாயிற்றுக்கிழமை (அக்.3) 1,000 இடங்களில் நடைபெறுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் தகுதியுள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசி அளிப்பது தொடா்பான அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் பேசியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி இதுவரையில் 11,03,388 பேருக்கு செலுத்தப்பட்டது. குறிப்பாக, மெகா கரோனா தடுப்பூசி முகாம்களில் பல ஆயிரக்கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை 3 மெகா முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

100 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் நான்காவது மெகா தடுப்பூசி செலுத்தும் முகாம் ஞாயிற்றுக்கிழமை(அக்.3) நடைபெறுகிறது. மாவட்டத்தில் 1000 இடங்களில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. முகாமில் சுமாா் 70,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத கிராம நிா்வாக அலுவலா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், மகளிா் திட்டத்தை சாா்ந்தவா்கள் இருந்தால், அவா்களைக் கண்டறிந்து, தடுப்பூசியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சங்கா், மகளிா் திட்ட அலுவலா் காஞ்சனா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) மோகன், துணை இயக்குநா்(சுகாதார பணிகள்) பொற்கொடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.