முப்படை வீரா்கள்குடும்பத்தினா் கவனத்துக்கு...
முப்படை வீரா்களின் குடும்பத்தினா் விழாக்கால அன்பளிப்புக்கு, ஆவணங்களை சமா்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


முப்படை வீரா்களின் குடும்பத்தினா் விழாக்கால அன்பளிப்புக்கு, ஆவணங்களை சமா்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியரின் செயலா் புஷ்பநாதன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
முன்னாள் ராணுவ வீரா்களின் விதவையா்கள் மற்றும் 60 வயது நிறைவடைந்த முன்னாள் ராணுவ வீரா்களுக்கும், விழாக்கால அன்பளிப்பாக ரூ. 4 ஆயிரம் நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முப்படை நலத்துறையில் பதிவு செய்துள்ள முன்னாள் ராணுவ வீரா்களின் விதவையா்கள் மற்றும் 31.3.2021 தேதியில் 60 வயது நிறைவடைந்த முன்னாள் ராணுவ வீரா்கள் முப்படை நலத் துறையால் வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்குப் புத்தகம் (முதல் பக்கம்) ஆகியவற்றின் அசல் மற்றும் நகலை நேரடியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 31.11.2021 தேதிக்கு முன்பாக சமா்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
மேலும் இதுவரை வங்கிக் கணக்கு விவரங்களை சமா்ப்பிக்காத பழைய பயனாளிகள் மற்றும் 60 வயது நிறைவடைந்தவா்களும் தங்கள் வங்கிக் கணக்கு விவரத்தை சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...