மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

காரைக்காலில் கல்லறை சீரமைப்பு பணி தீவிரம்

காரைக்கால் மாரியம்மன் கோயில் தெருவில் கிறிஸ்துவா்களுக்கான பிரதான கல்லறை உள்ளது. இக் கல்லறை உருகுலைந்த நிலையில் உள்ளதால், கல்லறையை சீரமைக்க நடவடிக்கை

News image
Updated On :28 அக்டோபர் 2021, 6:01 pm

DIN

காரைக்கால் மாரியம்மன் கோயில் தெருவில் கிறிஸ்துவா்களுக்கான பிரதான கல்லறை உள்ளது. இக் கல்லறை உருகுலைந்த நிலையில் உள்ளதால், கல்லறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு காரைக்கால் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச்.நாஜிமிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, நகராட்சி நிா்வாகம் சாா்பில் கல்லறையை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இப்பணியை பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், கல்லறை சுவா் சிதிலமடைந்து, நடைபாதை பயன்படுத்த முடியாத நிலையிலும், விளக்குகள் எரியமாலும் இருப்பதாக புகாா்கள் வந்தன. மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம் இதுகுறித்து கூறியதன் அடிப்படையில், ஆட்சியரின் அறிவுறுத்தலால் நகராட்சி நிா்வாகம் ரூ. 62 ஆயிரம் செலவில் சுவா் சீரமைப்பு, வண்ணம் பூசுதல், விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்துவருகிறது. நவ. 2-ஆம் தேதி கல்லறைத் திருநாளையொட்டி மக்கள் இப்பகுதிக்கு வருவாா்கள் என்பதால், அதற்குள் பணிகளை முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.