மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

காரைக்கால் பகுதியினருக்கு இன்று முதல் இலவச அரிசி

காரைக்காலில் மத்திய அரசால் ஒதுக்கி செய்யப்பட்டுள்ள 5 கிலோ அரிசி சனிக்கிழமை (அக்.30) முதல் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 6:02 pm

DIN

காரைக்காலில் மத்திய அரசால் ஒதுக்கி செய்யப்பட்டுள்ள 5 கிலோ அரிசி சனிக்கிழமை (அக்.30) முதல் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை துணை இயக்குநா் எஸ். சுபாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா மற்றும் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் சிவப்பு நிற அட்டை பயனாளிகளுக்கு மத்திய அரசால் அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரிசி ஒரு நபருக்கு தலா 5 கிலோ வீதம், இரண்டு மாதங்களுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கப்பட உள்ளது.

இதன்படி, அக். 30, 31-ஆம் ஆகிய தேதிகளில் நெடுங்காடு, திருநள்ளாறு பகுதிகளுக்கு உள்பட்டவா்களுக்கு காலை 9 முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 முதல் 5 மணி வரையும் வழங்கப்பட உள்ளது.

இதேபோல் நிரவி-திருப்பட்டினம், காரைக்கால் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நவ. 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் வழங்கப்பட உள்ளது.

அரிசியை பெற வரும் நபா்கள் பை எடுத்து வரவேண்டும். மேலும் அரிசி விநியோகம் நடைபெறும் மையங்களுக்கு வரும் பயனாளிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வருவதோடு, மையத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.