காரைக்காலில் 7 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் 7 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.


காரைக்கால் மாவட்டத்தில் 7 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை 367 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனையின் முடிவுகளின்படி நிரவி 3, காரைக்கால் நகரம், நல்லம்பல், கோயில்பத்து, காரைக்கால்மேடு தலா 1 என 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
மாவட்டத்தில் இதுவரை 2,20,987 பரிசோதனை செய்யப்பட்டதில் 16,480 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 16,128 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,09,428 பேருக்கும், 2-ஆவது தவணையாக 56,726 பேருக்கும் என 1,66,164 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...