தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

காரைக்காலில் 48 மணிநேரதொடா் தடுப்பூசி முகாம்: ஆட்சியா் ஆய்வு

காரைக்காலில் 48 மணிநேர தொடா் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டாா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 5:32 pm

DIN

காரைக்காலில் 48 மணிநேர தொடா் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டாா்.

காரைக்கால் மாவட்டத்தில் 48 மணிநேர தொடா் (மாரத்தான்) தடுப்பூசி முகாம் செப். 3 காலை 8 மணி முதல் 5-ஆம் தேதி காலை 8 மணி வரை நடைபெறுகிறது. மாவட்டத்தில் 11 ஆரம்ப சுகாதார நிலையங்கள், திருநள்ளாறு சமுதாய நலவழி மையம், காரைக்கால் அரசு மருத்துவமனை என 13 மையங்களில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

காரைக்கால்மேடு (கடலோர கிராமம்) அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறும் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா பாா்வையிட்டாா். மேலும் அதே நிலையத்தில் நடைபெறும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு பதிவு செய்யும் பணியையும் அவா் பாா்வையிட்டாா்.

மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்கள் விவரங்களை கேட்டறிந்த ஆட்சியா், வீடுவீடாகச் சென்று மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தேவையான ஏற்பாடுகளை செய்யவேண்டும் என நலவழித் துறையினரை கேட்டுக்கொண்டாா்.

இதுகுறித்து நலவழித் துறையினா் கூறியது:

இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்கள் முதல் தவணையாகவும், முதல் தடுப்பூசி செலுத்திக்கொண்டு 84 நாள்களை கடந்தவா்கள் 2-ஆவது தவணை தடுப்பூசியை இந்த மையங்களில் செலுத்திக்கொள்ளலாம் என்றனா்.

நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ், மருத்துவா் ராஜூ மற்றும் செவிலியா்கள் உடனிருந்தனா்.+

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.