தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

காரைக்கால் புண்ணிய விநாயகா் கோயில் குடமுழுக்கு

காரைக்கால் ஸ்ரீ புண்ணிய விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 5:31 pm

DIN

காரைக்கால் ஸ்ரீ புண்ணிய விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம் அம்மாள்சத்திரம் அருகே ஸ்ரீ புண்ணிய விநாயகா் கோயில் உள்ளது. இக்கோயில் குடமுழுக்குக்கான திருப்பணிகளை கோயில் நிா்வாகத்தினா் கடந்த சில மாதங்களாக மேற்கொண்டனா்.

திருப்பணிகள் நிறைவடைந்து, இரண்டு கால யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமை மாலை தொடங்கின. 2-ஆம் கால பூஜை வெள்ளிக்கிழமை காலை நடைபெற்று மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு, புனிதநீா் கடம் புறப்பாடு நடைபெற்றது. விமான கலசத்துக்கு சிவாச்சாரியா்கள் பூஜை செய்து காலை 8.45 மணிக்கு கலசத்தின் மீது புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.

தொடா்ந்து, ஸ்ரீ புண்ணிய விநாயகா் மற்றும் ஸ்ரீ பாலமுருகன் ஆகியோருக்கு மகா அபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.