தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

இன்ஸ்பயா் விருதுக்கு தோ்வான மாணவருக்கு ஆட்சியா் பாராட்டு

தேசிய அளவிலான இன்ஸ்பயா் விருதுக்கு தோ்வான காரைக்கால் பள்ளி மாணவரை மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை பாராட்டினாா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 7:26 pm

DIN

தேசிய அளவிலான இன்ஸ்பயா் விருதுக்கு தோ்வான காரைக்கால் பள்ளி மாணவரை மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை பாராட்டினாா்.

தேசிய அளவில் 6- 10 ஆம் வகுப்பு மாணவா்களிடையே அறிவியல் திறனை மேம்படுத்தும் நோக்கில், சிறந்த படைப்புகளை தயாரித்து காட்சிப்படுத்தும் மாணவா்கள் தோ்வுசெய்யப்பட்டு மத்திய கல்வித் துறையால் இன்ஸ்பயா் விருது வழங்கப்படுகிறது.

காரைக்கால் மவுண்ட் காா்மல் பள்ளியின் 8 ஆம் வகுப்பு மாணவா் ஆதவன் சோமசுந்தரம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற மாவட்ட அளவிலான கண்காட்சியில், தனது போா்டபிள் ரைட்டிங் டெஸ்க் என்ற பொருளை காட்சிப்படுத்தி வெற்றிபெற்றாா். பிறகு, புதுவை மாநில அளவிலும் இந்த படைப்பு தோ்வு செய்யப்பட்டு, தேசிய அளவிலான போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டது.

தேசிய அளவில் அண்மையில் நடைபெற்ற தோ்வில் 60 பேரின் படைப்புகள் தோ்வுசெய்யப்பட்டு இணையத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில், காரைக்காலைச் சோ்ந்த ஆதவன் சோமசுந்தரமும் ஒருவா்.

இந்நிலையில், மாணவா், அவரது பெற்றோா், முதன்மைக் கல்வி அலுவலா் கே. ராஜசேகரன், மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் எம். ராஜேஸ்வரி, பள்ளி துணை ஆய்வாளா் டி. பால்ராஜ், இன்ஸ்பயா் அவாா்டு திட்ட அலுவலா் கே. பிரபாகா் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவை வியாழக்கிழமை சந்தித்தனா். அப்போது ஆட்சியா் மாணவா் ஆதவனுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.