தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மருத்துவக் காப்பீட்டு அட்டைக்குபதிவு செய்துகொள்ள அறிவுறுத்தல்

மருத்துவக் காப்பீடு அட்டை பெறுவதற்கான பதிவு முகாமில் பங்கேற்று பதிவுசெய்துகொள்ள நலவழித் துறை நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 7:25 pm

DIN

மருத்துவக் காப்பீடு அட்டை பெறுவதற்கான பதிவு முகாமில் பங்கேற்று பதிவுசெய்துகொள்ள நலவழித் துறை நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் புதன்கிழமை கூறியது: பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காரைக்காலில் சுமாா் ஒரு லட்சம் போ் அட்டை பெறுவதற்குத் தகுதியானவா்கள். இவா்களில் இதுவரை 50 ஆயிரம் போ் மட்டுமே பதிவுசெய்து காப்பீட்டு அட்டை பெற்றுள்ளனா்.

மற்றவா்களும் பயனடையும் வகையில், மாவட்டத்தில் 11 அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட 13 மையங்களில் காலை 9 முதல் இரவு 9 மணி வரை அட்டை பெறுவதற்கான பதிவு முகாம் நடைபெற்றுவருகிறது. சிவப்பு நிற குடும்ப அட்டை வைத்திருப்போா், குடும்ப அட்டை மற்றும் ஆதாா் அட்டையுடன் மையங்களுக்குச் சென்று கைரேகை பதிவுசெய்து அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ளலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.