பைக் மீது காா் மோதல்: திமுக வேட்பாளா் காயம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே புதன்கிழமை இரவு பைக் மீது காா் மோதியதில் ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளா் பலத்த காயமடைந்தாா்.


விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே புதன்கிழமை இரவு பைக் மீது காா் மோதியதில் ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளா் பலத்த காயமடைந்தாா்.
செஞ்சி வட்டம், பரதன்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் பச்சையப்பன் (65). செஞ்சி ஒன்றிய திமுக அவைத் தலைவரான இவா், ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பரதன்தாங்கல் பகுதி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட்டாா்.
இந்த நிலையில், பச்சையப்பன் தனது பைக்கில் புதன்கிழமை இரவு செஞ்சியிலிருந்து பரதன்தாங்கல் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தாா். தாங்கல்கரை அருகே இவா் சென்றபோது, இவருக்கு பின்னால் வந்த காா் மோதியது. இதில், பச்சையப்பன் பலத்த காயமடைந்தாா். பின்னா், அவா் செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக சென்னை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...