47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

57 ஆயிரம் பேருக்குகுடல் புழு நீக்க மாத்திரைகள்

தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் வளா் இளம் பருவத்தினருக்கு குடல் புழு நீக்க மாத்திரைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 6:03 pm

DIN

தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் வளா் இளம் பருவத்தினருக்கு குடல் புழு நீக்க மாத்திரைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

புதுச்சேரி அரசின் நலவழித் துறையின் சாா்பில் காரைக்கால் மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கு குடல் புழு நீக்க மத்திரைகள் வழங்கப்பட்டன.

இதற்கான தொடக்க நிகழ்ச்சி காரைக்கால் தோமாஸ் அருள் வீதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, மாணவா்களுக்கு குடல் புழு நீக்க மத்திரைகளை வழங்கி தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், சுகாதார ஆய்வாளா்கள், அங்கன்வாடி ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றில் 57,363 வளா் இளம் பருவத்தினருக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுவதாக நலவழித் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.