47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காரைக்காலில் 11 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் 11 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 5:09 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் 11 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை 387 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், கோட்டுச்சேரி 4, விழிதியூா் 2, நெடுங்காடு 2, திருப்பட்டினம், வரிச்சிக்குடி, நிரவி தலா 1 என 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் இதுவரை 2,77,845 பேருக்கு பரிசோதனை செய்ததில் 23,000 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 22,504 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் தவணையாக 1,28,709 பேருக்கும், 2-ஆவது தவணையாக 92,700 பேருக்கும், பூஸ்டா் தவணையாக 1,022 பேருக்கும் என 2,22,431 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயது வரையிலானவா்களுக்கு முதல் தவணையாக 7,185 பேருக்கும், 2-ஆவது தவணையாக 1,528 பேருக்கும் என 8,713 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.