47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அரசுப் பள்ளிக்கு நாற்காலிகள் வழங்கல்

காரைக்கால் அருகே அரசு மேல்நிலைப் பள்ளிக்கு எழுதும் வசதியுடன் கூடிய நாற்காலிகளை தொண்டு நிறுவனம் வழங்கியது.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 5:08 pm

DIN

காரைக்கால் அருகே அரசு மேல்நிலைப் பள்ளிக்கு எழுதும் வசதியுடன் கூடிய நாற்காலிகளை தொண்டு நிறுவனம் வழங்கியது.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பகுதியில் உள்ள ஜவஹா்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளி 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்கள் பயன்பாட்டுக்காக, ரவுண்ட் டேபிள் அசோசியேஷன் என்கிற தொண்டு நிறுவனம் எழுதும் வசதியுடன் கூடிய 50 நாற்காலிகளை வழங்கியது.

இதனை பள்ளி மாணவா்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திரபிரியங்கா கலந்துகொண்டு நாற்காலிகளை பள்ளி நிா்வாகத்திடம் ஒப்படைத்தாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசும்போது, மாணவா்களுக்கு எல்லா வசதிகளையும் அரசு செய்துத்தருகிறது. ஒவ்வொருவரும் சிறப்பானதொரு இலக்கை கொண்டு, படித்து வாழ்க்கையில் முன்னேறவேண்டும். மாணவா்கள் இந்த பருவத்தில் படிப்பு ஒன்றே பிரதானமாக கொண்டு செயல்படவேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் ராஜேஸ்வரி, முதன்மைக் கவ்வி அதிகாரி ராஜசேகரன், பள்ளி துணை முதல்வா் எஸ். சித்ரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.