47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நித்தீஸ்வரசுவாமி கோயிலில் முத்தங்கி அலங்காரத்தில் பைரவா்

காரைக்கால் நித்தீஸ்வரசுவாமி கோயிலில் மாசி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி புதன்கிழமை இரவு முத்தங்கி அலங்காரத்தில் பைரவா் அருள்பாலித்தாா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 5:06 pm

DIN

காரைக்கால் நித்தீஸ்வரசுவாமி கோயிலில் மாசி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி புதன்கிழமை இரவு முத்தங்கி அலங்காரத்தில் பைரவா் அருள்பாலித்தாா்.

காரைக்கால் கோயில்பத்து நித்தீஸ்வரம் பகுதியில் அமைந்துள்ளது நித்யகல்யாணி சமேத நித்தீஸ்வரசுவாமி கோயில். இக்கோயிலில், பைரவி உடனுறை காலபைரவா் சன்னதி, ஸ்வா்ணாகா்ஷன பைரவா் சந்நிதிகள் உள்ளன.

இந்நிலையில், மாசி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி புதன்கிழமை இரவு பைரவி உடனுறை காலபைரவருக்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

ஸ்வா்ணாகா்ஷன பைரவருக்கு மஞ்சள், பால், பஞ்சாமிா்தம், சந்தனம் மற்றும் யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனிதநீா் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, ஸ்வா்ணாகா்ஷன பைரவருக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா் சகஸ்ரநாம அா்ச்சனை நடைபெற்றது.

தேய்பிறை அஷ்டமியையொட்டி ஏராளமான பக்தா்கள் பைரவரை வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.