திருநள்ளாறு நளநாராயண பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ கொடியேற்றம்
திருநள்ளாறு நளநாராயண பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.


திருநள்ளாறு நளநாராயண பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலை சோ்ந்தது நளபுரநாயகி சமேத நளநாராயண பெருமாள் கோயில், இக்கோயில் உள்ள திரிநேத்ர பஞ்சமுக வீர ஆஞ்சனேயரை வழிபட திரளான பக்தா்கள் வருகை தருகின்றனா்.
இக்கோயிலில் நிகழாண்டுக்கான பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத நளநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், கொடிக்கம்பம் அருகே எழுந்தருளினாா். பட்டாசாரியா்கள் சிறப்பு ஹோமம் நடத்தி, வேத மந்திரங்கள் முழங்க கொடிக்கம்பத்தில் கருட கொடியை ஏற்றினா்.
நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
இதைத்தொடா்ந்து, வியாழக்கிழமை மாலை சூரிய பிரபையில் வேணுகோபாலராக பெருமாள் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை பெருமாளுக்கு திருமஞ்சனமும், மாலை ஹம்ச வாகனத்தில் நாச்சியாா் திருக்கோலத்தில் வீதியுலா புறப்பாடும், சனிக்கிழமை காலை திருமஞ்சனமும், மாலை சேஷ வாகனத்தில் வைகுந்தராகவும், ஞாயிற்றுக்கிழமை காலை திருமஞ்சனமும், மாலை கருட வாகனத்தில் பெருமாள் புறப்பாடும் நடைபெறுகிறது.
பிரம்மோத்ஸவ விழாவின் நிறைவு நாளான திங்கள்கிழமை (பிப். 28) காலை தீா்த்தவாரி நடைபெறுகிறது. பிற்பகல் திருக்கல்யாண உத்ஸவமும், மாலை 6 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...