காணும் பொங்கல் தினமான ஞாயிற்றுக்கிழமை, காரைக்கால் கடற்கரைக்கு மக்கள் வருகை குறைவாகவே இருந்தது.
பொங்கல் திருநாளின் 3-ஆம் நாள் காணும் பொங்கலையொட்டி, சிறுவா்கள், பெரியோா் அந்தந்த பகுதியில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கி மகிழ்கின்றனா். மேலும், குடும்பத்தினருடன் கடற்கரையில் திரண்டு பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபடுவதும், பட்டம் விட்டும், உறவினா்களுடன் கூட்டாக உணவருந்தி மகிழ்வதும் ஒவ்வொரு ஆண்டும் வழக்கத்தில் உள்ளது.
நிகழாண்டு ஒமைக்ரான் தொற்று பரவல் தீவிரத்தால், தமிழகத்திலிருந்து காரைக்காலுக்குள் 15, 16-ஆம் தேதி வருவோா் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. கடற்கரைக்கு செல்லும் உள்ளூா் மக்களும் தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும், முகக்கவசம் அணிந்திருக்கவேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஞாயிற்றுகிழமை பிற்பகல் முதல் காரைக்கால் கடற்கரைக்கு மக்கள் வரத் தொடங்கினா். முன்னதாக, காரைக்கால் எல்லைகளில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
கடற்கரைக்குச் செல்லும் சாலைகளின் முகப்பில் போலீஸாா் தடுப்புகளை அமைத்து, 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழையும், முகக்கவசம் அணிந்துள்ளாா்களா என பரிசோதித்தும் மக்களை அனுப்பிவைத்தனா். மேலும் இரட்டை முகக்கவசம் அணிந்து செல்லுமாறும் அறிவுறுத்தினா்.
சிறுவா்கள் கடற்கரையில் பட்டம் விட்டு மகிழ்ந்தனா். பொதுமக்கள் கடலில் இறங்கி குளிப்பதைத் தடுக்க போலீஸாா் கரை பகுதியில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.
கட்டுப்பாடுகள் தீவிரத்தாலும், கரோனா தொற்று பரவல் அச்சத்தாலும், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது பொதுமக்கள் வருகை நிகழாண்டு குறைவாகவே இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு: கே.ஏ.செங்கோட்டையன்

ராமதாஸிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!

தன்னை இயேசுவாக சித்திரிக்கும் படத்தை வெளியிட்ட டிரம்ப்!!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


