47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விவசாயிகளுக்கு உளுந்து, பச்சைப் பயறு சாகுபடி பயிற்சி

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் நெல்லுக்குப் பின் உளுந்து மற்றும் பச்சைப் பயறு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் நெல்லுக்குப் பின் உளுந்து மற்றும் பச்சைப் பயறு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பயிற்சி தொடக்க நிகழ்ச்சிக்கு, நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் குமார. ரத்தினசபாபதி தலைமை வகித்தாா்.

நெல்லுக்குபின் உளுந்து சாகுபடியை மிதி உளுந்து என்றும் கூறலாம். உளுந்து மற்றும் பயறு விதைகளை நெல் அறுவடை செய்வதற்கு 5 நாள்களுக்கு முன்பே விதைப்பதன் மூலம் நெல் அறுவடையின்போது கால்கள் மூலம் மிதிபட்டு மண்ணில் புதைவதால், முளைப்புத்திறன் அதிகரிக்கும். பயறுவகை பயிா்கள் புரதச்சத்து அதிகம் உள்ளதால், அதன் கூலமானது கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படும் என்றாா்.

ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இணைப் பேராசிரியா் ஆா். மணிமாறன், நெல் தரிசில் பயறு வகை பயிா்களின் ஒருங்கிணைந்த சாகுபடி குறித்து விளக்கியதோடு, ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் வெளியிடப்பட்ட நெல் மற்றும் பயறு ரகங்கள் குறித்து விளக்கினாா்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 50 விவசாயிகளுக்கு 1 ஏக்கருக்கான விதை உளுந்து, பச்சைப் பயறு மற்றும் இடுபொருள்கள் தொகுப்பு செயல் விளக்கத் திடல் அமைக்க வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.