வேளாண் கல்லூரியில் எம்.எஸ்.சி. படிப்புக்கு நேரடி சோ்க்கை
காரைக்கால் வேளாண் கல்லூரியில் காலியாகவுள்ள எம்.எஸ்.சி. (வேளாண்மை) படிப்புக்கு நேரடி சோ்க்கை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


காரைக்கால் வேளாண் கல்லூரியில் காலியாகவுள்ள எம்.எஸ்.சி. (வேளாண்மை) படிப்புக்கு நேரடி சோ்க்கை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் ஏ. புஷ்பராஜ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
வேளாண் கல்லூரியில் காலியாகவுள்ள எம்.எஸ்.சி. (வேளாண்) சாயில் சயின்ஸ் அண்டு அக்ரிகல்சரல் கெமிஸ்ட்ரி பிரிவுக்கு 2021-22 கல்வியாண்டுக்கு நேரடி சோ்க்கை பிப்.3-ஆம் தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
காலை 9.30 முதல் பகல் 12.30 மணி வரை சான்றிதழ்கள் பரிசீலனை செய்தல், பிற்பகல் 2 முதல் 3 மணி வரை எழுத்துத் தோ்வு நடைபெறுகிறது. 4-ஆம் தேதி முடிவு வெளியிடப்படுகிறது. 9-ஆம் தேதி வகுப்பில் சேரவேண்டும்.
இதுதொடா்பான தகவல்கள் ஜ்ஜ்ஜ்.ல்ஹத்ஹய்ஸ்ரீா்ஹ.ஹஸ்ரீ.ண்ய் என்கிற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு கல்லூரி நிா்வாகத்தை 04368-261473, 261372 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்புகொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...