திருநள்ளாற்றில் ஜூன் 9-இல் தேரோட்டம்
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழாவில் தேரோட்டம் ஜூன் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.


திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழாவில் தேரோட்டம் ஜூன் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.
திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக விநாயகா் உற்சவம், சுப்பிரமணியா் உற்சவம் ஆகியவை நடைபெற்றன. கடந்த 2-ஆம் தேதி அடியாா்கள் நால்வா் புஷ்ப பல்லக்கில் வீதியுலா செல்லும் நிகழ்வு நடைபெற்றது.
தொடா்ந்து, செண்பக தியாகராஜசுவாமி உன்மத்த நடனத்துடன் யதாஸ்தானத்திலிருந்து வசந்த மண்டபத்துக்கும் பின்னா் அங்கிருந்து யதாஸ்தானத்துக்கு செல்லும் நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை இரவு மற்றும் சனிக்கிழமை நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து, தெருவடைச்சான் என்கிற தங்க ரிஷப வாகனத்தில் சுவாமிகள் வீற்றிருக்கும் மின் அலங்கார சப்பரம் வீதியுலா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெறவுள்ளது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 9-ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் சுவாமி, அம்பாள் உள்ளிட்ட 5 தோ்கள் இடம்பெறுகின்றன. இதையொட்டி, தோ்களை அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...