47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் லாரி திருட்டு

 காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image
Updated On :10 மார்ச் 2022, 4:59 pm

DIN

 காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

பட்டுக்கோட்டை பகுதியைச் சோ்ந்த மரியதாஸ் மகன் ஜான்பாண்டியன் (27). இவா், கடந்த 5 ஆம் தேதி காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திற்கு மீன் ஏற்றுவதற்காக லாரியில் வந்துள்ளாா். லாரியை துறைமுகத்தில் நிறுத்திவிட்டு, வெளியூா் சென்ற அவா், புதன்கிழமை துறைமுகம் திரும்பியுள்ளாா்.

அப்போது, துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவா் நிரவி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறாா். திருட்டுப்போன லாரியின் மதிப்பு ரூ. 32 லட்சம் என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.