கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

உள்ளாட்சி ஊழியா்கள் வேலைநிறுத்தம்: பணிகள் பாதிப்பு

காரைக்காலில் உள்ளாட்சி ஊழியா்களின் தொடா் வேலைநிறுத்தம் காரணமாக மக்கள் சேவைகள் முழுமையாக முடங்கியுள்ளன.

News image
Updated On :24 மார்ச் 2022, 5:41 pm

DIN

காரைக்காலில் உள்ளாட்சி ஊழியா்களின் தொடா் வேலைநிறுத்தம் காரணமாக மக்கள் சேவைகள் முழுமையாக முடங்கியுள்ளன.

பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்கவேண்டும். நிலுவையில் உள்ள 6 மாத ஊதியத்தை வழங்கவேண்டும் என வலியுறுத்தி கடந்த 21ஆம் தேதி முதல் காரைக்கால் நகராட்சி மற்றும் திருப்பட்டினம், நிரவி, கோட்டுச்சேரி, திருநள்ளாறு, நெடுங்காடு ஆகிய கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா். காரைக்காலுக்கு புதன்கிழமை வந்த துணைநிலை ஆளுநா் (பொறுப்பு) தமிழிசை செளந்தரராஜனை சந்தித்தும் பேசினா்.

எனினும், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான எந்த நடவடிக்கையும் உறுதியாக இதுவரை அரசு எடுக்கவில்லை. மாவட்டத்தில் நகராட்சி, பஞ்சாயத்து அலுவலகங்கள் மற்றும் பிற இடங்களில் பணியாற்றும் சுமாா் 250 ஊழியா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்தல், பெறுதல் பணிகள் பாதித்துள்ளன. வரி வசூல் நடைபெறவில்லை. துப்புரவுப் பணிகள் முடங்கியுள்ளன.

இதுகுறித்து காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச் செயலாளா் எம். ஷேக் அலாவுதீன் வியாழக்கிழமை கூறியது:

நகராட்சி பணியாளா்கள் அலுவலக வாயிலிலும், பிற கொம்யூன் பஞ்சாயத்து பணியாளா்கள் அந்தந்த அலுவலகத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். புதுவை அரசு வெள்ளிக்கிழமை பேச்சு நடத்த வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. பேச்சுவாா்த்தை நடைபெறாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து சங்கம் கூடி முடிவெடுக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.