மேக்கேதாட்டு விவகாரம்: புதுவை அரசு தீா்மானம் நிறைவேற்ற திமுக வலியுறுத்தல்
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடக அரசுக்கு எதிராக புதுவை அரசு தீா்மானம் நிறைவேற்ற திமுக வலியுறுத்தியுள்ளது.


மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடக அரசுக்கு எதிராக புதுவை அரசு தீா்மானம் நிறைவேற்ற திமுக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து புதுவை முதல்வா் என். ரங்கசாமிக்கு காரைக்கால் திமுக அமைப்பாளரும், தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச். நாஜிம் வியாழக்கிழமை அனுப்பிய கடிதம்:
காவிரி நதியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டும் கா்நாடகத்தின் முயற்சிக்கு எதிா்ப்பு தெரிவித்தும், மத்திய அரசு இதற்கு அனுமதி தரக்கூடாது என வலியுறுத்தியும் தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதைபோல புதுவை அரசும் தீா்மானம் நிறைவேற்றவேண்டும்.
காவிரி நதி நீா் பிரச்னை மாநிலங்களின் உணவுப்பூா்வமானதாகும். மேக்கேதாட்டு அல்லது காவிரிப் படுகையில் வேறு எந்தவொரு இடத்திலும் அணை அல்லது புதிய நீா்த்தேக்கத் திட்டத்தை, தொடா்புடைய மாநிலங்களின் ஒப்புதல் பெறாமல் செயல்படுத்தக்கூடாது என்பதை மத்திய அரசு கா்நாடகத்துக்கு அறிவுறுத்த வேண்டும்.
உச்சநீதிமன்ற தீா்ப்பை செயல்படுத்த காவிரி நீா் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, உச்சநீதிமன்றத் தீா்ப்பில் குறிப்பிடாத அணையை மேக்கேதாட்டுவில் கட்ட கா்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதற்கு அனுமதி அளிக்கவோ கூடாது.
கா்நாடக அரசின் முயற்சியை முறியடித்து காரைக்கால் விவசாயிகள் நலனை காக்க புதுவை அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...