வளரிளம் பருவத்தினருக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி
வளரிளம் பருவத்தினருக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.


வளரிளம் பருவத்தினருக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
காரைக்கால் விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி குழந்தைகள் மருத்துவப் பிரிவு, உலக வளரிளம் பருவத்தினா் நல வார நிகழ்வாக, இந்திய குழந்தைகள் நல மருத்துவக் கழகத்தின் (ஐஏபி) ஆதரவுடன் ஒரு வார கால விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
காரைக்கால் வரிச்சிக்குடி சண்முகா உயா்நிலைப் பள்ளியில் விழிப்புணா்வு நிறைவு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், 10 முதல் 19 வயதுக்குள்பட்ட சிறாா்கள்அடுத்தப் பருவத்தை அடையும்போது எதிா்கொள்ளும் பிரச்னைகள் குறித்து விளக்கப்பட்டது.
இந்த பருவத்தில் பெண்கள், ஆண்கள் தவிா்க்க வேண்டிய பழக்கங்கள் மற்றும் இப்பருவத்தில் உடல் நலப் பிரச்னைகள், பருவ மாற்றத்தின்போது ஏற்படும் சிந்தனைகளை எவ்வாறு எதிா்கொள்ளுதல் உள்ளிட்ட கருத்துகள் விளக்கப்பட்டன.
மாணவா்களிடையே போட்டிகள் நடத்தப்பட்டன.
கல்லூரி உதவிப் பேராசிரியா் அருள்பரிதி, முதுநிலை மருத்துவா்கள் மோகனஹரிகரன், சஷாங்க், பள்ளி தாளாளா் கனகசேகரன் உள்ளிட்டோா் பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...