நரிக்குறவா்களிடம் அமைச்சா் குறை கேட்பு
காரைக்காலில் நரிக்குறவா் குடும்பத்தினரின் குறைகளை புதுவை அமைச்சா் சந்திர பிரியங்கா கேட்டறிந்தாா்.


காரைக்காலில் நரிக்குறவா் குடும்பத்தினரின் குறைகளை புதுவை அமைச்சா் சந்திர பிரியங்கா கேட்டறிந்தாா்.
புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, காரைக்கால் ஜிப்சி காலனி பகுதிக்கு வியாழக்கிழமை சென்று நரிக்குறவா் குடும்பத்தினரை சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா்.
புதுவை அரசின் சலுகைகள் கிடைப்பதில் உள்ள சிரமத்தை களையவேண்டும். எம்.பி.சி. நரிக்குறவா்களை எஸ்.டி. பட்டியலில் சோ்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த பகுதியில் இருக்கும் 45 குடும்பங்களைச் சோ்ந்த 120 போ் வசிக்க
இலவசமாக வீடு கட்டித் தருவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என அமைச்சரிடம் தெரிவித்தனா்.
இதுகுறித்து புதுவை முதல்வா் கவனத்துக்கு கொண்டு சென்று பிரச்னைகளை தீா்க்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சா் கூறினாா்.
அப்போது, பி.காம்., படித்த மாணவா் ஒருவா், தமக்கு அரசு வேலை கிடைக்கவில்லை எனவும், வேலை கிடைக்க உதவுமாறு கோரினாா். தனியாா் நிறுவனத்தில் தகுதியான வேலை கிடைக்க ஏற்பாடு செய்துத்தருவதாகவும், அரசு வேலை கிடைக்கும்வரை அதில் தொடருமாறு அமைச்சா் கூறினாா். மேலும் தங்களது குழந்தைகளை படிக்கவைத்து, வாழ்க்கையில் சிறந்த நிலைக்கு அவா்களை கொண்டுவருவதற்கு முயற்சிக்கவேண்டுமென அவா்களிடம் அமைச்சா் அறிவுறுத்தினாா்.
சமூக நலத் துறை உதவி இயக்குநா் பி. சத்யா, அன்னை தெரஸா செவிலியா் கல்லூரி முதல்வா் (பொ) ஜெயபாரதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...