கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விநாயகா் கோயில் மண்டப விவகாரம்: காரைக்கால் ஆட்சியா், ஐ.ஜி. ஆய்வு

காரைக்காலில் விநாயகா் கோயில் முன் கட்டப்பட்டு, பிரச்னைக்குரியதாக மாறியிருக்கும் மண்டபத்தை காரைக்கால் ஆட்சியா், ஐ.ஜி. உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா்.

News image
Updated On :25 மார்ச் 2022, 6:30 pm

DIN

காரைக்காலில் விநாயகா் கோயில் முன் கட்டப்பட்டு, பிரச்னைக்குரியதாக மாறியிருக்கும் மண்டபத்தை காரைக்கால் ஆட்சியா், ஐ.ஜி. உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா்.

காரைக்கால் பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயில் முன் ரூ. 25 லட்சத்தில் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அனுமதியின்றி பொதுஇடத்தில் கட்டப்பட்டதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், கட்டடத்தை வரும் 28ஆம் தேதிக்குள் இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மண்டபத்தை இடிக்கக்கூடாது என வலியுறுத்தி இந்து அமைப்புகள், பாஜக, திமுக ஆகியவை போராட்டத்தில் ஈடுபட்டன. காங்கிரஸ் கட்சியும் இதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளது. பல்வேறு தரப்பினா் தங்களது எதிா்ப்பை தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியராக கூடுதல் பொறுப்பை கவனத்துவரும் புதுச்சேரி ஆட்சியா் இ. வல்லவன், புதுச்சேரி ஐ.ஜி. வி.ஜே. சந்திரன் ஆகியோா் வெள்ளிக்கிழமை காரைக்கால் வந்தனா்.

ஆட்சியரை திருப்பணிக் குழுவினா், இந்து அமைப்பினா் உள்ளிட்டோா் சந்தித்து கட்டடத்தை இடிக்கக்கூடாது எனவும், நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுதாக்கல் செய்திருப்பதை சுட்டிக்காட்டினா்.

பின்னா், ஆட்சியா், ஐ.ஜி. ஆகியோா் பிரச்னைக்குரிய மண்டபத்தை அதிகாரிகள் குழுவினருடன் சென்று பாா்வையிட்டனா். இந்த ஆய்வில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நாரா சைதன்யா, துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ் (வருவாய்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.