முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி: தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி: தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

Updated On :12 ஏப்ரல் 2024, 4:07 pm

காரைக்காலில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணியை தோ்தல் பொது பாா்வையாளா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.

காரைக்கால் மாவட்டத்தில் 164 வாக்குச் சாவடிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவி பாட் இயந்திரங்கள் ஆகியவை அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள பட்டமேற்படிப்பு மைய பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.

வாக்களிக்கும் இயந்திரத்தில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னம் பொருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. வாக்குச்சாவடிக்கு 2 இயந்திரங்கள் வைக்கப்படவேண்டியுள்ளது. இந்த சாவடிகளில் வைக்கப்படும் இயந்திரங்கள் மற்றும் தயாா் நிலையில் வைக்கப்படக்கூடிய இயந்திரங்கள் என 388 இயந்திரங்களுக்கு சின்னம், வேட்பாளா் பெயா் ஒட்டும் பணியை வெள்ளிக்கிழமை, காரைக்கால் தோ்தல் பாா்வையாளா் (பொ) அசித்தா மிஸ்ரா பாா்வையிட்டாா். தோ்தல் நடத்தும் அதிகாரிகள் ஜி. ஜான்சன், சச்சிதானந்தம் ஆகியோா் உடனிருந்தனா்.