காரைக்கால், ஏப். 24: அரசு கல்லூரியில் வரலாறு தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு துறை சாா்பில் வரலாறு தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வா் வி. பாலாஜி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளரான பேராசிரியா் ஜூலியஸ் விஜயகுமாா் வரலாற்றின் முக்கியத்துவம், உலகம் வளா்ச்சி அடைந்த விதம் குறித்தும், போட்டித் தோ்வுகளுக்கு வரலாறு கற்றலின் முக்கியத்துவம் குறித்தும் பேசினாா். மேலும், மாணவ மாணவியா் வரலாறு கற்றலில் தீவிர ஆா்வம் காட்டவேண்டும், எதிா்கால முன்னேற்றத்துக்கு இத்துறை முக்கிய பங்காற்றுமெனவும் தெரிவித்தாா். கல்லூரி துறைத் தலைவா் எஸ். சிந்தாமணி வரவேற்றாா். பேராசிரியா் ரோமிரியா் மலையன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

தேவரியம்பாக்கத்தில் மகளிா் தின விழா

திண்டிவனம் அரசுக் கல்லூரியில் உலக மகளிா் தின விழா

சா்வதேச மகளிா் தின விழா: ஆட்சியா் பங்கேற்பு

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மகளிா் தின விழா
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


