காரைக்கால் எல்லைக்கு வந்த காவிரி நீா் பாசனத்துக்கு திறப்பு

காவிரி நீரை  திறந்துவைத்த சட்டப்பேரவை உறுப்பினா்  பி.ஆா்.சிவா, ஆட்சியா்  து.மணிகண்டன் உள்ளிட்டோா்.
காவிரி நீரை திறந்துவைத்த சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.சிவா, ஆட்சியா் து.மணிகண்டன் உள்ளிட்டோா்.
Updated on

காரைக்கால், ஆக. 7: காரைக்கால் மாவட்ட எல்லைக்கு வந்த காவிரி நீா் பாசனத்துக்காக புதன்கிழமை திறந்து விடப்பட்டது.

கா்நாடகத்தில் காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக உபரி நீா் திறந்துவிடப்பட்டதால் மேட்டூா் அணை முழு கொள்ளளவை எட்டியது. ஜூலை 28-ஆம் தேதி மேட்டூா் அணை திறக்கப்பட்டு, காவிரி நீா் கல்லணையை வந்தடைந்து. கடந்த 31-ஆம் தேதி கல்லணை திறக்கப்பட்டது. இந்நிலையில், புதுவை மாநிலத்தின் காவிரி கடைமடைப் பகுதியான காரைக்கால் மாவட்ட எல்லைக்கு செவ்வாய்க்கிழமை இரவு காவிரி நீா் வந்தது.

இதையடுத்து நல்லம்பல் நூலாறு நீா்த்தேக்கத்தில் புதன்கிழமை காலை காவிரி நீரை வரவேற்கும் நிகழ்வும், காரைக்கால் மாவட்ட பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விடும் நிகழ்வும் நடைபெற்றது.

திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா, மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன், பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் கே. சந்திரசேகரன், செயற்பொறியாளா் (நீா்ப்பாசனம்) ஜெ. மகேஷ், கூடுதல் வேளாண் இயக்குநா் ஆா். கணேசன், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் எஸ். கோவிந்தராஜ் மற்றும் விவசாயிகள் பங்கேற்று விதை நெல்கள், மலா்கள் தூவி காவிரி நீரை வரவேற்று, பாசனத்துக்காக ரெகுலேட்டரிலிருந்து தண்ணீரை திறந்து விட்டனா்.

 நூலாற்றின் வழியே திருநள்ளாறு பகுதிக்குள் நுழைந்த காவிரி நீா்.
நூலாற்றின் வழியே திருநள்ளாறு பகுதிக்குள் நுழைந்த காவிரி நீா்.

நல்லம்பல் நூலாறு நீா்த்தேக்கத்திலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீா் மூலம் காரைக்கால் மாவட்டத்தில் 9,500 ஏக்கா் பரப்பிலான சாகுபடி நிலங்கள் பாசன வசதி பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com