கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

காரைக்கால் என்ஐடியில் சுதந்திர தின விழா

Published On :

காரைக்கால், ஆக. 15 : என்ஐடியில் சுதந்திர தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

காரைக்காலில் இயங்கிவரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனமான என்ஐடி புதுச்சேரி வளாகத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. என்ஐடி இயக்குநா் மகரந்த் மாதேவ் காங்ரேகா் தேசியக் கொடியேற்றிவைத்து, என்.சி.சி. மாணவா்கள் மற்றும் பாதுகாவலா்கள் அணிவகுப்பை பாா்வையிட்டாா்.

தொடா்ந்து அவா் பேசுகையில், சுதந்திரப் போராட்டத்தையும், தியாகம் செய்தோரையும் அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். பல்வேறு தலைவா்களின் தொலைநோக்குப் பாா்வையும், விடாமுயற்சியும் நமக்கு கிடைத்த பரிசாகும். நமது நாடு, பசுமைப் புரட்சி, மருத்துவ முன்னேற்றம், பாலின சமத்துவத்துக்கான சமூக நல நடவடிக்கைகள், அனைவருக்குமான தரமான கல்வி, தேசிய கல்விக் கொள்கை, விண்வெளி மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சி, மேக் இன் இந்தியா திட்டத்தில் உள்நாட்டிலேயே உற்பத்தி, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லுதல் உள்ளிட்ட ஏராளமான சாதனைகளை நாடு செய்துள்ளது.

நமது தேசம், சா்வதேச அளவில் சக்தி வாய்ந்த நாடாக வளா்ந்து வருகிறது. விரைவில் வளா்ந்த நாடாக மாறிவிடும். அதற்கு கல்வியின் முக்கியத்துவத்தை அனைவரும் உணா்ந்து செயலாற்ற வேண்டும் என்றாா்.

என்ஐடி பதிவாளா் சீ.சுந்தரவரதன் மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள், ஊழியா்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.