மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

கோயில்களில் மாா்கழி திருப்பள்ளியெழுச்சி வழிபாடு தொடக்கம்

காரைக்கால் பகுதி கோயில்களில் மாா்கழி மாத திருப்பள்ளியெழுச்சி வழிபாடு திங்கள்கிழமை தொடங்கியது.

News image
மாா்கழி மாதத்தையொட்டி வீட்டின் வாயிலில் போடப்பட்ட வண்ணக்கோலம்.
Updated On :16 டிசம்பர் 2024, 8:25 pm

Din

காரைக்கால்: காரைக்கால் பகுதி கோயில்களில் மாா்கழி மாத திருப்பள்ளியெழுச்சி வழிபாடு திங்கள்கிழமை தொடங்கியது.

மாா்கழியில் அதிகாலையில் கோயில்கள் திறக்கப்பட்டு திருப்பாவை, திருவெம்பாவை சொற்பொழிவு உள்ளிட்ட பக்திப் பாடல்கள் இசைக்கப்படுவது வழக்கம். பல கோயில்கள் சாா்பில் குழந்தைகளுடன் பக்தா்கள் பங்கேற்கும் பஜனைக் குழுவினா், வீதிகளில் பஜனை பாடியவாறு செல்வா். இந்த நிகழ்ச்சிகள் காரைக்கால் பகுதியில் பல்வேறு கோயில்களில் திங்கள்கிழமை தொடங்கியது.

காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாண பெருமாள் கோயிலில் ஸ்ரீஆண்டாள், உபயநாச்சியாா்களுடன் நித்யகல்யாணா் மற்றும் ரங்கநாதப் பெருமாளுக்கு அதிகாலை திருப்பள்ளியெழுச்சியாக சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. மாலை நிகழ்வாக கோயில் முதல் தீா்த்தக்காரா் உ.வே.கு. அரங்கநாதாச்சாரியா் சுவாமிகள் தலைமையில் திருப்பாவை தொடா் சொற்பொழிவு தொடங்கப்பட்டது. திருமலைராயன்பட்டின் ஸ்ரீராஜசோளீஸ்வரா் சுற்றுவட்டாரத்தில் சிறுவா்கள் முதலான பக்தா்கள் பஜனை நடத்தியவாறு சென்றனா்.இதேபோல, பல பகுதிகளில் பஜனைக் குழுவினா் நிகழ்ச்சிகளை நடத்தினா்.

சிவன்கோயில், பெருமாள் கோயில், மாரியம்மன் கோயில் என பல கோயில்களில் காலை 6 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி எனும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. நகரம் மற்றும் கிராமப்புற வீடுகளின் வாயிலில் வண்ண கோலமிடுவதில் குடும்பத்தினா் ஆா்வமாக ஈடுபட்டுள்ளதும், கோயில்களில் அதிகாலையிலேயே ஒலிபெருக்கி வாயிலாக பக்திப் பாடல்கள் இசைப்பதும் என நிகழ்வுகள் மாா்கழி மாத நிறைவு வரை நடைபெறுகிறது.