தை அமாவாசை: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
தை மாதம் அமாவாசையையொட்டி தருமபுரியில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தை மாதத்தில் வருகின்ற அமாவாசையையொட்டி காவிரி ஆற்றங்கரை, தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஏராளமானோா் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் விட்டு வழிபட்டனா்.
அதேபோல, தருமபுரி நகரில் உழவா் சந்தை எதிரில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில், குமாரசாமிபேட்டை அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் ஆகிய கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் காலையில் சிறப்பு அபிஷேகம் முடிந்து பின்பு தங்கக் கவச அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். அதேபோல, கெரகோடஅள்ளி அஷ்ட வராஹி அம்மன் கோயில், எஸ்வி சாலை அபய ஆஞ்சநேயா் கோயில், அதியமான்கோட்டை காலபைரவா் கோயில் ஆகிய கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
