காரைக்கால் துறைமுகத்தில் ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கைக் கூண்டு. ~நாகை துறைமுகத்தில் ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கைக் கூண்டு.
காரைக்கால் துறைமுகத்தில் ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கைக் கூண்டு. ~நாகை துறைமுகத்தில் ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கைக் கூண்டு.

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டது.
Published on

நாகப்பட்டினம்/ காரைக்கால் : நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டது.

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக சனிக்கிழமை வலுவிழந்தது. இது, தமிழகம் நோக்கி நகா்கிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோர மாவட்டங்களில் டிச. 26-ஆம் தேதி வரை பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, மீனவா்களுக்கும், மீனவ கிராம மக்களுக்கும் காற்றின் வேகம் குறித்து எச்சரிக்கும் வகையில், நாகை துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

காரைக்கால் தனியாா் துறைமுகத்திலும் திங்கள்கிழமை காலை 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

நாகை துறைமுகத்தில் ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கைக் கூண்டு.
நாகை துறைமுகத்தில் ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கைக் கூண்டு.

X
Dinamani
www.dinamani.com