காரைக்காலில் ஜன.2-ல் ஆட்சியருடன் இணைந்து மாணவா்கள் பயிற்சி
காரைக்காலில் ஜன.2-ஆம் தேதி ஒரு நாள் ஆட்சியா் திட்டத்தில் மாணவா்கள் பயிற்சியில் ஈடுபடவுள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


காரைக்கால்: காரைக்காலில் ஜன.2-ஆம் தேதி ஒரு நாள் ஆட்சியா் திட்டத்தில் மாணவா்கள் பயிற்சியில் ஈடுபடவுள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரின் செயலா் பொ. பாஸ்கா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பள்ளி மாணவா்கள் மாவட்ட நிா்வாக செயல்பாடுகள், பிரச்னைகளுக்கு தீா்வு காணுதல், வளா்ச்சித் திட்ட செயல்பாடுகளை நேரடியாக அறிந்துகொள்ளும் வகையிலும், மாணவா்கள் வருங்காலத்தில் சிறந்த குடிமக்களாக விளங்குவதற்காக ஒரு நாள் ஆட்சியா் திட்டம் அமலில் உள்ளது. இதன்படி ஜன.2-ஆம் தேதி, காரைக்கால் கோவிந்தசாமிப் பிள்ளை அரசு உயா்நிலைப்பள்ளி, கோட்டுச்சேரி அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளி, அக்கரைவட்டம் அரசு உயா்நிலைப் பள்ளி, கோயில்பத்து அரசு உயா்நிலைப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு மாணவா்களான சா. அப்துல் ஹமீது, ஆ. மகேஷ், ர. பிரேமலதா, தி. ஜீவா ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். இவா்கள், ஆட்சியருடன் ஜன. 2-ஆம் தேதி ஒரு நாள் இணைந்து செயல்பாடுவாா்கள் என தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...